×

“பூமி உள்ள வரை நீ நட்ட மரம் பேசும்” – விவேக் மறைவுக்கு ஹர்பஜன் சிங் தமிழில் இரங்கல்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் விவேக் இன்று மறைந்தார். திரைப்படங்களில் தனக்குக் கிடைத்த நகைச்சுவை கதாபாத்திர வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி மூட நம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வு வசனங்களைத் தூவிச் சென்றவர் இன்று கண்மூடி விட்டார். இதனால் தான் அவருக்குச் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தைச் சூடி அகமகிழ்ந்தர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. விவேக்கின் மறைவுக்குப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும்
 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் விவேக் இன்று மறைந்தார். திரைப்படங்களில் தனக்குக் கிடைத்த நகைச்சுவை கதாபாத்திர வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி மூட நம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வு வசனங்களைத் தூவிச் சென்றவர் இன்று கண்மூடி விட்டார். இதனால் தான் அவருக்குச் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தைச் சூடி அகமகிழ்ந்தர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

விவேக்கின் மறைவுக்குப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்துகின்றனர். தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அந்த ட்வீட்டில், “உங்களை எப்படி போற்றினாலும் அது குறைவாக தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம். பூமி உள்ள வரையில் உன் கலை பேசும்; நீ நட்ட மரங்கள் பேசும். உங்கள் ஆன்மா அமைதியாக இளைப்பாறட்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.