×

ஜி.எஸ்.டி பாக்கி ரூ.12250.5 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்! – பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.12,250.5 கோடி ஜி.எஸ்.டி பாக்கியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள முக்கியமான நிதி சிக்கல்களில் ஒன்று ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்குப் பிறகு ஏற்படும் குறுகிய கால பாதிப்பை எதிர்கொள்வதற்கான இழப்பீட்டை வழங்கப்படாமல் இருப்பதுதான் என்பதை அறிவீர்கள். எந்தெந்த வருவாய் இழப்புகளுக்கு மாநிலங்களுக்கு
 


தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.12,250.5 கோடி ஜி.எஸ்.டி பாக்கியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள முக்கியமான நிதி சிக்கல்களில் ஒன்று ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்குப் பிறகு ஏற்படும் குறுகிய கால பாதிப்பை எதிர்கொள்வதற்கான இழப்பீட்டை வழங்கப்படாமல் இருப்பதுதான் என்பதை அறிவீர்கள்.

எந்தெந்த வருவாய் இழப்புகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அளித்த தெளிவான உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்த ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இத்தகைய இழப்பீடு வழங்குவதை 101வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி (மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குதல்) சட்டம் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.


ஏப்ரல் 1, 2020 முதலான வருவாய் வசூலில் ஏற்பட்ட இழப்பை எதிர்கொள்வதற்கான இழப்பீட்டை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இன்றை நாள் வரை தமிழக அரசுக்கு ரூ.12,250.5 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட்19 காரணமாக தமிழகம் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. எனவே, தமிழக அரசுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்த, மருத்துவ உதவிகள் வழங்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க கூடுதலாக 7000ம் கோடி அளவுக்கு செலவு ஏற்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசு சில நிதி உதவிகளை செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, தமிழக அரசுக்கு உடனடியாக இதை எதிர்கொள்ள நிதி தேவைப்படுகிறது.


தற்போது ஜி.எஸ்.டி நிலுவைத் தொகைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியிலோ, வெளியிலோ கடன் வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்.
இந்த ஆண்டுக்கான நிலுவைத் தொகை இந்த ஆண்டே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆத்ம நர்பார் பாரத் திட்டத்தின் கீழ் ஜிடிபி-யில் 2 சதவிகிதம் அளவுக்கு கூடுதல் கடன் வாங்க அனுமதி அளிக்க வேண்டும்.
2022 மார்ச் 31க்குப் பிறகு செலுத்தப்படும் இழப்பீடு தொடர்பான முறையான மற்றும் திட்டவட்டமான உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.
ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கடன் வாங்க இந்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ள நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும் மாநிலங்கள் நேர்மையுடனும் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வதோடு, அத்தியாவசிய செலவின கடமைகளை பூர்த்தி செய்ய போதுமான நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்யும். அது, மாநிலத்தின் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த தன்னுடைய பங்களிப்பை வழங்கும்” என்று கூறியுள்ளார்.