×

5 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே திமுக அரசு அதிரடியாக செயல்பட தொடங்கியது. அதன்படி, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது தருமபுரி, திருச்சி, மதுரை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய
 

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே திமுக அரசு அதிரடியாக செயல்பட தொடங்கியது. அதன்படி, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது தருமபுரி, திருச்சி, மதுரை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு பதிலாக சிவராசு நியமனம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகாவுக்கு பதிலாக திவ்யதர்ஷினி நியமனம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு பதிலாக அனீஷ் சேகர் நியமனம்

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு பதிலாக கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரிக்கு பதிலாக பாலசுப்ரமணியம் ஐ.ஏ.எஸ். நியமனம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.