×

நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை ஏற்பாடு: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு அம்மாநிலத்தையே புரட்டி போட்டது. இந்த நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாறு பகுதியில் இருந்து வேலைக்காக சென்றவர்கள் உட்பட 80 பேர் சிக்கினர். வேலை செய்வதற்காக குடிபெயர்ந்து அங்கு வசித்த தமிழர்களுக்கு தேயிலை எஸ்டேட் சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் சிக்கிய 15 பேர்
 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு அம்மாநிலத்தையே புரட்டி போட்டது. இந்த நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாறு பகுதியில் இருந்து வேலைக்காக சென்றவர்கள் உட்பட 80 பேர் சிக்கினர். வேலை செய்வதற்காக குடிபெயர்ந்து அங்கு வசித்த தமிழர்களுக்கு தேயிலை எஸ்டேட் சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

அந்த நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு மேலாக மீட்புப் பணி தொடர்ந்த நிலையில், நேற்று வரையில் 42 சடலங்கள் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டது. மேலும் பலரின் உடல் நிலச்சரிவிலேயே சிக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்களே பெரும்பாலும் நிலச்சரிவில் உயிரிழந்திருப்பதால் இறந்தவர்களை பார்க்க கூட முடியமால் உறவினர்கள் கதறுகின்றனர். அவர்களுக்கு உரிய இபாஸ் நடவடிக்கை செய்து தர வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கயத்தாறில் இருக்கும் நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.