×

அதிகளவு பரிசோதனை செய்வதில் அரசு கவனம் செலுத்துகிறது : அமைச்சர் உதயகுமார் பேட்டி

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 92,206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து விட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா அதிகமாக பரவும் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும்
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 92,206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து விட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா அதிகமாக பரவும் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும் நாளை தமிழகத்தில் தளர்வு இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகளவு செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் முதல்வரின் தீவிர நடவடிக்கைகளின் காரணமாகவே அதிகம் பேர் குணமடைந்து வருகின்றனர் என்றும் கூறினார்.