×

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் இயக்க அனுமதி!

தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கையை ஏற்று பேருந்துகள் இயக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இ-பாஸ் அனுமதி பெற தேவையில்லை என தமிழக அரசு அறிவிப்பு என்றும் இ-பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பொது போக்குவரத்து புதுச்சேரியில் நிறுத்தப்பட்டது.
 

தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கையை ஏற்று பேருந்துகள் இயக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இ-பாஸ் அனுமதி பெற தேவையில்லை என தமிழக அரசு அறிவிப்பு என்றும் இ-பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பொது போக்குவரத்து புதுச்சேரியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க தொடங்கின. இருப்பினும் தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை இயக்கப்படாமல் இருந்தது.

கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு வெளிமாநிலங்களுக்கு பேருந்து இயக்கத்தை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த சூழலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தமிழக அரசிடம் விரைவில் தமிழகம் -புதுவை இடையே பேருந்து சேவையை தொடங்க அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருந்தார் .தற்போது புதுச்சேரிக்கு பேருந்து சேவையை தொடங்க தமிழக அரசு அனுமதி அனுமதியளித்துள்ளது.