×

இனி நடிப்புக்கு குட் பை… அரசியல் அறிவிப்புக்கு ரெடியான ரஜினி.!?

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற விவாதம் இன்று நேற்றல்ல, கடந்த 25 ஆண்டுகளாகவே தமிழகத்தை சுற்றி வரும் கேள்வியாக உள்ளது. அந்த கேள்விக்கு அவரைத் தவிர யாருக்கும் தெளிவான விடை இப்போது வரை கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.ஆனால், இந்த ஆண்டு டிசம்பருக்குள் அந்த கேள்விக்கு தெளிவான விடை மக்களுக்கு கிடைத்து விடும் என நம்பத் தகுந்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. அந்த விடை, ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும் என்கிறார்கள். தனகான அரசியல் பாதைக்கு
 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற விவாதம் இன்று நேற்றல்ல, கடந்த 25 ஆண்டுகளாகவே தமிழகத்தை சுற்றி வரும் கேள்வியாக உள்ளது. அந்த கேள்விக்கு அவரைத் தவிர யாருக்கும் தெளிவான விடை இப்போது வரை கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு டிசம்பருக்குள் அந்த கேள்விக்கு தெளிவான விடை மக்களுக்கு கிடைத்து விடும் என நம்பத் தகுந்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. அந்த விடை, ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும் என்கிறார்கள்.


தனகான அரசியல் பாதைக்கு கால நேரம் பார்த்து கணக்குகள் போடும் ரஜினி, பல நேரங்களில் ஆர்வமாக இருந்தாலும், கட்சிக்கான வலுவாக கட்டமைப்பு இருந்தால்தான் இறங்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தார். அதனால்தான் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றியது, ஒவ்வொரு ஊரிலும் கட்டமைப்பை வலுப்படுத்துவது என வேலைகளை முடுக்கி இருந்தார்.
இந்த நிலையில்தான் அவர் எதிர்பார்த்த மாற்றம் நடக்கும் என நம்பிக்கையுடன் வரும் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு நேரடி அரசியலில் களம் இறங்க உள்ளார். அவருடைய தற்போதைய நகர்வுகளை சட்டமன்ற தேர்தலை முன்வைத்து எடுக்கப்படுகின்றன என்பதை கவனிக்க முடிகிறது.


அண்ணாத்த படத்தில் அவருக்கான போர்ஷனை மட்டும் நவம்பருக்கு முன்னரே எடுத்துக் கொள்ளச் சொல்லி படக்குழுவிடம் கூறிவிட்டாராம். இந்த நிலையில், தற்போது கசிந்துள்ள இன்னொரு தகவல் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கான கமல் தயரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருந்த படத்தில் இருந்தும் விலகி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதையடுத்து, லோகேஷ் கனகராஜ்க்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்ப பெறாமல், அவர் இயக்க, வேறொரு கதையில் இந்தியன் 2 படத்துக்கு பிறகு கமல் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அண்ணாத்த படத்தை முடித்து விட்டு, லோகேஷ் கன்கராஜ் படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து விலகியதற்கு அரசியல் கணக்குதான் காரணம் என்கின்றனர்.


அண்ணாத்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு, நேரடியாக ’அண்ணாத்த’ அரசியலில் இறங்குவது முடிவாகிவிட்டது. அப்புறம் என்ன? வரும் தேர்தலில் படையப்பா பட்டாசு ’சும்மா பட்டைய கிளம்பும்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-தமிழ்தீபன்