×

‘அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை’ : இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பொதுமுடக்கம் போடப்பட்டதும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தது என்பது அனைவரும் அறிந்தவையே. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். இதையடுத்து, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தங்கம் விலை கணிசமாக குறைந்தது. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்ட ஆபரணத்தங்கத்தின் விலை மளமளவென சரிந்து ரூ.37க்கு விற்கப்பட்டு வந்தது. அதன் பிறகு, தங்கம் விலையில் பெரிதாக
 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பொதுமுடக்கம் போடப்பட்டதும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தது என்பது அனைவரும் அறிந்தவையே. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். இதையடுத்து, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தங்கம் விலை கணிசமாக குறைந்தது. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்ட ஆபரணத்தங்கத்தின் விலை மளமளவென சரிந்து ரூ.37க்கு விற்கப்பட்டு வந்தது. அதன் பிறகு, தங்கம் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை என்றாலும் மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.4,792க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.38,336க்கு விற்கப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.70 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,700க்கும் விற்பனையாகிறது.