×

நாளை முழு ஊரடங்கு… ஒத்துழைப்பு வழங்க பொது மக்களுக்கு கோரிக்கை!

வார நாட்கள் முழுக்க ஊரடங்கு தளர்வு உள்ள நிலையில், வாரத்தின் ஒரே ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை மட்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெறும் முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது. வாரம் முழுக்க சாலைகளில் கூட்ட நெரிசல், சந்தைகளில் கூட்ட நெரிசல் என்று இருக்கும்போது எல்லாம் பரவாத கொரோனா, ஞாயிற்றுக்
 

வார நாட்கள் முழுக்க ஊரடங்கு தளர்வு உள்ள நிலையில், வாரத்தின் ஒரே ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை மட்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெறும் முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கொரோனா பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது. வாரம் முழுக்க சாலைகளில் கூட்ட நெரிசல், சந்தைகளில் கூட்ட நெரிசல் என்று இருக்கும்போது எல்லாம் பரவாத கொரோனா, ஞாயிற்றுக் கிழமை கறிக் கடைகளில் கூடுவதால் வரவிவிடுது போன்று ஊரடங்கு கொண்டு வரப்படுவது நியாயம் இல்லை என்று பல தரப்பினரும் வேதனை தெரிவிக்கின்றனர்.


ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக் கிழமையே மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் கூடிவிடுகிறது. வழக்கம் போல இன்றும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். இதுவே கொரோனாவுக்கு வழிவகுத்துவிடும் வாய்ப்பாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை ஞாயிற்றுக் கிழமை மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாளை காலை நேரத்தில் மட்டும் பால்

கடைகள் செயல்படும். மற்றபடி வழக்கம் போல மருந்து கடைகள் மட்டும் செயல்படும். காய்கறி, மளிகைக் கடைகள் மூடப்பட்டிருக்கும். உணவகங்கள் செயல்படாது. எனவே, முன்கூட்டியே பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளும்படியும், அவசர தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் போலீசார் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.