×

தமிழகம் முழுக்க முழு ஊரடங்கு? – மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வருகிற திங்கட்கிழமை மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 3500 பேருக்கு கொரோனா உறுதியானது. இது மாநிலம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே, மாவட்ட அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வர வேண்டும் என்று நிபுணர்கள் கூறி
 

தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வருகிற திங்கட்கிழமை மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 3500 பேருக்கு கொரோனா உறுதியானது. இது மாநிலம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே, மாவட்ட அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வர வேண்டும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் வருகிற திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை, முழு ஊரடங்கு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.