×

மீண்டும் முழு ஊரடங்கு : வழக்கத்தை விட பல கோடி அதிகரித்த மதுவிற்பனை!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரேநாளில் 1,515பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் இந்த ஊரடங்கின் போது செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள
 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரேநாளில் 1,515பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 12 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் இந்த ஊரடங்கின் போது செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 300 கடைகளில் 150 கடைகள் மட்டுமே மூடப்படவுள்ளது. இந்த கடைகளின் ஒரு நாள் வருமானம் 18 கோடியாக உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காரணமாக மதுபிரியர்கள் முன்கூட்டியே மது வாங்கி வைத்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.