×

“அரசுப் போக்குவரத்து பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுக” – கமல் ஹாசன் கோரிக்கை!

அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் இன் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை பற்றி அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்டகாலமாக போராடி வரும் பணியாளர்களுக்கு தமிழக அரசு செவிசாய்க்க
 

அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் இன் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை பற்றி அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளன. தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்டகாலமாக போராடி வரும் பணியாளர்களுக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிப்பதுடன், அனைத்து காலி பணியிடங்களையும் நேர்மையாக தேர்வு செய்யப்பட்டவர்களை கொண்டு நிரப்ப தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு கண்ணியமான பணி சூழலில் உறுதி செய்திடவும் புதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.பணியிட மாற்றம் ,பதவி உயர்வு, ஓவர் டியூட்டி என அனைத்திலும் நீடிக்கும் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும்.

7 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பஞ்சப்படி உடனடியாக வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவ காப்பீடு திட்டம் தரமான கேன்டீன் வசதியான ஓய்வெடுக்கும் அறைகள், உடல்நலத்தையும், உள்ள ஆரோக்கியத்தையும், அதற்கான பயிற்சிகளை அளித்தல் ஆகியவையும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

திமுக ஆட்சி போக்குவரத்து தொழிலாளர்களின் பொற்காலமாக அமையும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன் . அதை செயலில் காட்டும் வகையில் நடைபெறவிருக்கும் பட்ஜெட் மற்றும் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரில் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.