×

“இலங்கை தமிழர்களுக்கு ரேஷனில் இலவச அரிசி; விலையில்லா கேஸ் இணைப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தும், புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று தெரிகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகரங்களில் தேவைப்படும் இடங்களில் புறவழிச் சாலைகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து இன்றைய அலுவல்களில் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் விதி எண்
 

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தும், புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று தெரிகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகரங்களில் தேவைப்படும் இடங்களில் புறவழிச் சாலைகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து இன்றைய அலுவல்களில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது; இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். ரேஷன் கடையில் இலங்கை தமிழர்களுக்கு விலையில்லா அரிசி அளிக்கப்படும். அத்துடன் இலங்கை தமிழரின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்” என்றும் அறிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டு ரூபாய் 5 கோடி , கல்விக்காக ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.இலங்கை தமிழர் நலனுக்காக ஆண்டுதோறும் 6 கோடி என ரூபாய் 30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ.2,500லிருந்து ரூ.10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு ரூ.3000ல் இருந்து ரூ.12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.5000ல் இருந்து ரூ.20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.