×

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி நவ. 1- ஆம் தேதி தொடங்கும்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. இதனிடையே தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துவரும் சூழலில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையுடன்
 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன.

இதனிடையே தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துவரும் சூழலில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்த கோவையைச் சேர்ந்த தனியார் அமைப்பு 2021ஆம் ஆண்டிற்கும் பயிற்சி அளிக்க உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக இணையவழி நீட் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், விருப்பம் உள்ள மாணவர்கள் https://t.co/eXCcQlp0sD என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 4 மணி நேரம் வகுப்பு மற்றும் 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.