×

தியேட்டரில் படம் பார்க்க வருவோருக்கு இலவசமாக மாஸ்க் வழங்க முடிவு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, படம் பார்க்க வருபவர்கள் எல்லாருக்கும் இலவச மாஸ்க் வழங்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் டெல்லி, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் தியேட்டர்கள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அக்.20ம் தேதி தியேட்டர் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே, தியேட்டர்கள்
 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, படம் பார்க்க வருபவர்கள் எல்லாருக்கும் இலவச மாஸ்க் வழங்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் டெல்லி, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் தியேட்டர்கள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அக்.20ம் தேதி தியேட்டர் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே, தியேட்டர்கள் திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து விட்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு இலவசமாக மாஸ்க வழங்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். அதே போல, சமூக இடைவெளி, ஆன்லைன் டிக்கெட், 50% இருக்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றுவோம் என உறுதியளித்து தியேட்டர்களை திறக்குமாறு முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர்.