×

ஸ்டாலின் அரசில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு!

தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு குழுவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெற்றுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 13ஆம் தேதி நடந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த
 

தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு குழுவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 13ஆம் தேதி நடந்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த குழு குறித்து அறிவிக்கப்பட்டது.

இதில் திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸின் முனிரத்தினம், பாமகவின் ஜி.கே. மணி, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், எஸ் எஸ் பாலாஜி, நாகை மாலி ,ராமச்சந்திரன் ,ஜவஹருல்லா, ஈஸ்வரன் ,வேல்முருகன் , பூவை ஜெகன் மூர்த்திஎன அனைத்துக் கட்சிகளிலும் இருந்தும் ஒரு எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.