×

திமுக முன்னாள் எம்எல்ஏ உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

புதுக்கோட்டை தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பே. மாரியய்யா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த மாரியய்யா, திமுகவின் தற்போதைய வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்தார். கடந்த ஓராண்டுகளாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரின் சொந்த ஊர் கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம்
 

புதுக்கோட்டை தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பே. மாரியய்யா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த மாரியய்யா, திமுகவின் தற்போதைய வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்தார்.

கடந்த ஓராண்டுகளாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரின் சொந்த ஊர் கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் கிராமமாகும். அவரது உடல் தனியார் மருத்துவமனையிலிருந்து சொந்தவூருக்கு அழைத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.