×

இழுத்து மூடப்பட்ட ஆலை… ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய சிஇஓ திடீர் ராஜினாமா!

உலகளவில் மிகப் பிரபலமான கார் நிறுவனம் ஃபோர்டு மோட்டார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, இந்தியா என பல்வேறு உலக நாடுகளில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. சமீபத்தில் லாபம் இல்லாத காரணத்தாலும் உற்பத்தியாகாத காரணத்தாலும் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆலைகளை மூடியது. அதேபோல இந்தியாவிலும் ஆலைகளை மூட முடிவெடுத்துள்ளதாக அறிவித்தது. இது தேசியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஏனென்றால் சென்னை மறைமலைநகரில்
 

உலகளவில் மிகப் பிரபலமான கார் நிறுவனம் ஃபோர்டு மோட்டார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, இந்தியா என பல்வேறு உலக நாடுகளில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. சமீபத்தில் லாபம் இல்லாத காரணத்தாலும் உற்பத்தியாகாத காரணத்தாலும் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆலைகளை மூடியது. அதேபோல இந்தியாவிலும் ஆலைகளை மூட முடிவெடுத்துள்ளதாக அறிவித்தது.

இது தேசியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஏனென்றால் சென்னை மறைமலைநகரில் தான் ஃபோர்டு மோட்டாரின் மிகப்பெரிய உற்பத்தி ஆலை இயங்கிவருகிறது. மற்றொன்று குஜராத்தில் இருக்கிறது. இந்த இரு ஆலைகளையும் மூடிவிட்டு, இறக்குமதியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகவும் அறிவித்தது. ஃபோர்டு நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் கணிசமாக முதலீடு செய்தபோதிலும் தங்களால் லாபம் பார்க்க முடியவில்லை என்பதாலும் கடந்த 10 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம் கோடி) நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாலும் இம்முடிவை எடுப்பதாக தெரிவித்தது.1990-களில் இந்தியாவிற்குள் நுழைந்த ஃபோர்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடையைக் கட்டுகிறது. உலகளவில் பிரபலமான ஃபோர்டு நிறுவனம் இந்திய கார் சந்தையில் வெறும் 1.57 சதவீதம் தான் ஷேர் வைத்துள்ளது என்பது அதிர்ச்சியடைய வைக்க கூடிய விஷயம் தான்.

இனி இந்தியாவில் ஃபோர்டு மீண்டு வருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இதனால் நிறுவனத்தின் தொழிலாளர்கள் வெவ்வேறு வேலைகளைத் தேட ஆரம்பித்துவிட்டனர். இச்சூழலில் அந்நிறுவனத்தின் இந்திய தலைமைச் செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா ராஜினாமா செய்துள்ளார். இதனை உறுதிப்படுத்தியுள்ள ஃபோர்டு நிறுவனம் பாலசுந்தரம் ராதாகிருஷ்ணன் என்பவரை தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவர் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் உற்பத்தி இயக்குநராக இருந்தார்.