×

தமிழகத்தில் முதன் முறையாக விமான ஓடுதளத்திற்கு கீழ் 4 வழிச்சாலை

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபபடியாக பெரிய விமான நிலையம் என்ற அந்தஸ்தைக் கொண்டது மதுரை விமான நிலையம். இது 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. சராசரியாக சென்னை, பெங்களூரு, சிங்கப்பூர் செல்வதற்கென மாதம் ஒன்றுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் வருகின்றனர். மதுரை விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதை 7 ஆயிரத்து 500 சதுர அடி நீளமாகும். இதனை 12 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இந்த விரிவாக்கத்திற்காக
 

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபபடியாக பெரிய விமான நிலையம் என்ற அந்தஸ்தைக் கொண்டது மதுரை விமான நிலையம். இது 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. சராசரியாக சென்னை, பெங்களூரு, சிங்கப்பூர் செல்வதற்கென மாதம் ஒன்றுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் வருகின்றனர்.


மதுரை விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதை 7 ஆயிரத்து 500 சதுர அடி நீளமாகும். இதனை 12 ஆயிரத்து 500 சதுர அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இந்த விரிவாக்கத்திற்காக தமிழக அரசு ரூ.166 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது 90 சதவீத கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கிடையில் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யவும் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.


ஜெர்மனியில் உள்ள லெய்சிக் விமான நிலைய ஓடுதளத்தின் மேல் சாலையில் விமான ஓடுதளமும், கீழ் சாலையில் வாகன போக்குவரத்தும் இருக்கிறது. அதே போல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லால்பகதூர் விமான நிலையத்திலும் மேல்புற சாலையில் விமான ஓடுதளமும், கீழ்பகுதியில் 4 வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.இதே முறையில் மதுரையில் விமான ஓடுதளம் மேல்புறமும், கீழ்புறம் ரிங்ரோடு நான்குவழிச்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இது குறித்து ஆய்வுக்கூட்டம் மதுரை விமான நிலையத்தில் நடந்தது. அமைச்சர் உதயகுமார், ஆட்சியர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் அமைச்சர் உதயகுமார் கூறும்போது:- மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்யும் அதே வேளையில் ஓடுதளம் விரிவாக்கத்திற்காக ‘அண்டர்பாஸ்’ முறை திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, மேல் பகுதியில் விமான ஓடுதளமும், கீழ் பகுதியில் ரிங்ரோடு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்றார்.