×

நீர்வளத்துறை அலுவலகம் செல்லும் சாலையில் சூழ்ந்த வெள்ளநீர் : போக்குவரத்து தடை!

கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. தமிழகத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை ,திருவாரூர், நாகை ,கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருவதால்
 

கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை ,திருவாரூர், நாகை ,கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தரமணி சாலையில் இடுப்பளவு தண்ணீர் சாலைகளில் தேங்கியுள்ளது. தமிழ்நாடு நீர்வளத்துறை அலுவலம் போகும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதி வழியாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.