×

தொடர் கனமழையால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு : வெள்ள அபாய எச்சரிக்கை!

புழல் ஏரியின் மொத்த அடியான 21 அடியில் நீர்மட்டம் 19.2 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்படுகிறது. புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. புழல் ஏரியின் மொத்த அடியான 21 அடியில் நீர்மட்டம் 19.2 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்படுகிறது. சென்னை
 

புழல் ஏரியின் மொத்த அடியான 21 அடியில் நீர்மட்டம் 19.2 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்படுகிறது.

புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. புழல் ஏரியின் மொத்த அடியான 21 அடியில் நீர்மட்டம் 19.2 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்படுகிறது.

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 573 கன அடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தாலும் நீர் திருப்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.