×

தேனியில் ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,538பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,538பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


அந்த வகையில்  தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால்  சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தேனியில்  இதுவரை 39 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,160 ஆக உயர்ந்துள்ள நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 827 ஆக உள்ளது.