×

சென்னையில் கொரோனா தொற்றால் பெண் தலைமை செவிலியர் பலி!

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் பரவியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று ஒரே நாளில் 817பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பெண் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்களுக்கான பணிநேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட
 

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் பரவியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று ஒரே நாளில் 817பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பெண் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்களுக்கான பணிநேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கவனித்து வந்தார்.

இதை தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவால் கடந்த 26 ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா உயிரிழந்தார்.