×

மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாநிலமான தமிழகத்தில், லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயத்தையே நம்பியே இருக்கிறது. தற்போது மழை போதிய அளவு பெய்யாததால் பம்புசெட் மூலம் பெறும் தண்ணீர் மூலமாக விவசாயம் நடைபெற்று வருகிறது. அதனால் விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அதே போல, தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்சார நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார
 

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாநிலமான தமிழகத்தில், லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயத்தையே நம்பியே இருக்கிறது. தற்போது மழை போதிய அளவு பெய்யாததால் பம்புசெட் மூலம் பெறும் தண்ணீர் மூலமாக விவசாயம் நடைபெற்று வருகிறது. அதனால் விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அதே போல, தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்சார நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதாவால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காமல் போகும்.

இந்த நிலையில் மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம், திருவாரூர், வேதாரண்யம், மதுரை உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அண்ணாநகர் இல்லத்தின் முன் வைகோ கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.