×

எட்டுவழிச்சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு; மொட்டை போட்டு விவசாயிகள் போராட்டம்!

சேலத்தில் இருந்து சென்னை வரை எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை- மதுரை இடையே நெடுஞ்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விதிகளை மீறி சென்னை-சேலம் எட்டுவழிசாலையை அமைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
 

சேலத்தில் இருந்து சென்னை வரை எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை- மதுரை இடையே நெடுஞ்சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விதிகளை மீறி சென்னை-சேலம் எட்டுவழிசாலையை அமைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பி வரும் இந்த வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்கு தடை விதிக்கக்கோரி திருவண்ணாமலை, செங்கம் அருகே உள்ள நங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மொட்டை அடித்து, முட்டி போட்டு, கதறி அழுது போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருவதால், போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய எதிர்ப்பை மீறி எட்டுவழிச்சாலையை அரசு பரிசீலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.