×

ஃபேமிலி மேன் தொடரை தடை செய்ய இயலாது – அமைச்சர் தகவல்!

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகம் கடந்த 3ம் தேதி அமேசானில் வெளியானது. இந்தப் படம் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
 

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகம் கடந்த 3ம் தேதி அமேசானில் வெளியானது. இந்தப் படம் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளனர். இந்த நிலையில், ஃபேமிலி மேன் தொடரை தடை செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையென அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஃபேமிலி மேன் தொடர் தமிழக மக்களை புண்படுத்துகிறது. அதை தடை செய்வதற்கான அதிகாரம் அரசுக்கு இல்லை. மத்திய அரசு அந்த தொடரை தடை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறினார். மேலும் இ – பாஸ் குறித்து பேசிய அமைச்சர், ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் இ- பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது என்றும் இன்று மாலைக்குள் இணையதளம் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.