×

மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,875பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38, 716ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று 1,372பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,705 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்த பாடில்லை மாறாக பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை இங்கு 25,937 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,507 சிகிச்சை பலன்பெற்று
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,875பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38, 716ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று 1,372பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,705 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்த பாடில்லை மாறாக பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுவரை இங்கு 25,937 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,507 சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 12,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் சென்னையில் மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்பதும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என்று வெளியாகும் தகவலிலும் உண்மை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, “சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் சென்னையில் முழு ஊரடங்கிற்கு அரசு உத்தரவிட்டால் அடைகளை அடைக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.