×

பள்ளத்தில் விழுந்து மரணமா? மாரடைப்பா? : சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் நரசிம்மன், இன்று பணிக்கு செல்வதற்காக மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு சாலை பள்ளத்தில் தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்த நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், நரசிம்மனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மழை நீரில் தவறி விழுந்ததால் தான் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதற்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்தது. அவர் சாலை
 

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் நரசிம்மன், இன்று பணிக்கு செல்வதற்காக மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு சாலை பள்ளத்தில் தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்த நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், நரசிம்மனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மழை நீரில் தவறி விழுந்ததால் தான் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதற்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்தது. அவர் சாலை பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கவில்லை என்றும் வேறு ஏதேனும் காரணம் இருக்கக்கூடும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அந்த நபர் கீழே விழுந்ததன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில் சாலையில் நடந்து வரும் நரசிம்மன் பள்ளத்தின் அருகே சற்று நேரம் நின்று, பிறகு அதில் திடீரென விழுகிறார். பின்னால் வந்தவர் அவரை இழுக்க முயன்றும் எந்த பலனும் இல்லை. நரசிம்மனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் பள்ளத்தில் விழுந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடருகின்றனர்.