×

ஃபேஸ்புக்கில் ஆள் சேர்ப்பு… போலி இ-பாஸ் மூலம் மோசடி… கேரள கும்பலை வளைத்துப் பிடித்த போலீசார்!

நாட்டில் எந்தவித பேரிடரோ, பரபரப்போ ஏற்பட்டால் அதை வைத்தும் பணம் பார்க்கும் கும்பல் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அவதிப்பட்டு வருவதால் இந்த நிலையைப் பயன்படுத்தி போலி இ-பாஸ் மூலம் பயணிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். தற்போது போலி இ-பாஸ் மூலம் பயணிகளை ஏமாற்றி வசூல் வேட்டை நடத்தியதாக கேரளாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது தமிழகத்தில் ஊரடங்கு
 

நாட்டில் எந்தவித பேரிடரோ, பரபரப்போ ஏற்பட்டால் அதை வைத்தும் பணம் பார்க்கும் கும்பல் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அவதிப்பட்டு வருவதால் இந்த நிலையைப் பயன்படுத்தி போலி இ-பாஸ் மூலம் பயணிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தற்போது போலி இ-பாஸ் மூலம் பயணிகளை ஏமாற்றி வசூல் வேட்டை நடத்தியதாக கேரளாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது

தமிழகத்தில் ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அவசர தேவைகளுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. பிற மாநில மற்றும் மாவட்டங்கள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் வழங்குவது தற்போது நிறுத்தப்பட்டு வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று பேஸ்புக் மூலம் பயணிகளை கண்டறிந்து எர்ணாகுளம் – விசாகப்பட்டினம் போவதற்கு திருமணம் மற்றும் இறப்பிற்காகச் செல்வதாக இ-பாஸ்களை வாங்கி அதன் மூலம் கோவை வழியாக செல்ல அனுமதி பெறுகின்றனர். அதன்பிறகு கேரளாவில் இருந்து கோயமுத்தூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளையும் ஆந்திரா செல்லும் பயணிகளை ஏற்றிக் கொள்கின்றனர். கடக்கும் ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் பேருந்தில் இருப்பவர்கள் உறவினர்கள் என்று பொய் கூறி கடந்து வந்துள்ளனர்.

ஒரே வாகனம் தொடர்ந்து பல எல்லைகளைக் கடந்துள்ளதை அறிந்த போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். போலீஸ் தனியாக குழு ஒன்றை அமைத்து, தாங்கள் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக ஃபேஸ்புக் கும்பலிடம் கூறியுள்ளனர். இதையடுத்து காவல் துறை அந்தக் கும்பலிடம் பேரம்பேசி வாளையார் எல்லைக்கு வரவைத்து அந்தப் பேருந்தை மடக்கிப் பிடித்து அந்த மோசடி கும்பலை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பேருந்தில் போலி ஆவணங்கள் மற்றும் பயணிகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டது இந்த கும்பலின் முக்கிய குற்றவாளி ஆண்டனி சூரியன் என்ற நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.