×

ஃபேஸ்புக், யூடியூபுக்கு தடை விதிக்க வேண்டும்! – உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பதிவுகள் வெளியாவதைத் தடுக்கத் தவறிய ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கந்த சஷ்டி கவசம் பற்றி தவறான கருத்தை தெரிவித்ததாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஊடகங்கள் அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் மனு
 

மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பதிவுகள் வெளியாவதைத் தடுக்கத் தவறிய ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


கந்த சஷ்டி கவசம் பற்றி தவறான கருத்தை தெரிவித்ததாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஊடகங்கள் அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “கொரோனா பேரிடலில் உலகமே தவிக்கும் நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், கடவுள்கள், மதத் தலைவர்கள் பற்றி தொடர்ந்து அவதூறான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.


மாரிதாஸ், கிஷோர் கே.ஸ்வாமி, சவுக்கு சங்கர் என பலரும் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் இது போன்ற பதிவுகள் வெளியிடக் கூடாது என விதிகள் வகுத்த போதும், தொடர்ந்து பதிவுகள் வெளியாகின்றன. இவற்றை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்