×

திமுக விண்வெளிக்கு சென்று பிரச்சாரம் செய்தாலும் ‘அது மட்டும்’ நடக்காது : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

நிவர் புயலால் பெரும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களை பயமுறுத்தி விட்டு சென்றது. இதில் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். இருப்பினும் நிவர் புயலினால் பெருமளவு சேதம் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதை முற்றிலுமாக மறுத்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நிவர் புயலை எதிர்கொள்ள அரசு எந்த நடவடிக்கையும்
 

நிவர் புயலால் பெரும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களை பயமுறுத்தி விட்டு சென்றது. இதில் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். இருப்பினும் நிவர் புயலினால் பெருமளவு சேதம் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இதை முற்றிலுமாக மறுத்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நிவர் புயலை எதிர்கொள்ள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல் உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “அரசு எடுத்த நடவடிக்கையால் நிவர் புயலால் பெரும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. நிவர் புயலுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும். திமுகவினர் விண்வெளியில் சென்று பரப்புரை செய்தாலும் மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள்” என்றார்.