×

ஈரோடு: நேதாஜி தினசரி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய கோரும் தே.மு.தி.க.

தேமுதிக கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் மோகனசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனை சந்தித்து மனு கொடுத்தனர் . அந்த மனுவில், ‘’கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆர்கேவி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் வஉசி மைதானத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. தற்போது மழைக்காலம் என்பதால் வஉசி மைதானத்தில் சேறும் சகதியுமாக உள்ளதால்
 

தேமுதிக கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் மோகனசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனை சந்தித்து மனு கொடுத்தனர் .

அந்த மனுவில், ‘’கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆர்கேவி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் வஉசி மைதானத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. தற்போது மழைக்காலம் என்பதால் வஉசி மைதானத்தில் சேறும் சகதியுமாக உள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிகின்றனர். மேலும் ஆர்கேவி சாலை

பகுதியில் உள்ளதால் மளிகை பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் எளிதில் கிடைக்கும் பகுதிகளாக இருப்பதால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே உடனடியாக மார்க்கெட்டினை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.