×

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதே போல நேற்று 1200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்தது. மேலும் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸால் சில தளர்வுகளுடன் 5
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதே போல நேற்று 1200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்தது. மேலும் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸால் சில தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது.

ஊரடங்கால் தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை தாமதம் ஆகியுள்ளது. வழக்கமாக இந்த மாதத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் எல்லாம் வெளியாகி. மாணவர்கள் சேர்க்கை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கொரோனாவால் எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிர பரவலால் புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.