×

தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த சிறுவர்களுக்கு முதல்வர் பாராட்டு!

மேலூரை சேர்ந்த கண்ணன் – கலைவாணி தம்பதியரின் மகன்கள் பாலச்சந்தர், பாலகுமார். இரட்டை சகோதரர்களான இவர்கள் அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவருகின்றனர். சிறு வயது முதலே அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர்கள், கையில் கிடைத்த பொருட்களை கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். விபத்தில் சிக்கிய தனது தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தந்தை உயிரிழந்ததாகவும், அந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக
 

மேலூரை சேர்ந்த கண்ணன் – கலைவாணி தம்பதியரின் மகன்கள் பாலச்சந்தர், பாலகுமார். இரட்டை சகோதரர்களான இவர்கள் அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவருகின்றனர். சிறு வயது முதலே அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர்கள், கையில் கிடைத்த பொருட்களை கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். விபத்தில் சிக்கிய தனது தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தந்தை உயிரிழந்ததாகவும், அந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக இத்தகைய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததாக சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுவர்களை பாராட்டியுள்ள முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை-மேலூரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி விரைந்துவர “தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை” கண்டுபிடித்துள்ளது பாராட்டிற்குரியது. சகோதரர்கள் இருவரது உன்னத கண்டுபிடிப்புகள் தொடர எனது நல்வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.