×

கோவை அரசு மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!

திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலன் ராவின் மகன் விக்ரம்குமார். இவருக்கு க்டந்த சில நாட்களுக்கு முன் குடலில் துளை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவைசிகிச்சை செய்த இடத்தில் கசிவு ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில்ல் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா
 

திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலன் ராவின் மகன் விக்ரம்குமார். இவருக்கு க்டந்த சில நாட்களுக்கு முன் குடலில் துளை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவைசிகிச்சை செய்த இடத்தில் கசிவு ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில்ல் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா காலத்திலும் மிகவும் உடல் நலிவுற்று வந்தவருக்கு சிகிச்சை அளித்த கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “விபத்து ஒன்றில் அடிபட்டு வயிற்றுப்பகுதி கிழிந்து இறக்கும் தருவாயில் இருந்த புலம்பெயர் தொழிலாளி விக்ரம் குமாரை துரிதமாக செயல்பட்டு கோவை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது. நெருக்கடியான சூழலிலும் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளர்.