×

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது: முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகள், அடுத்து மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள், இ-பாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா தொடர்பான அரசின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அரசின் அறிவுரைகளை பின்பற்றினால் தான் நோய்
 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகள், அடுத்து மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள், இ-பாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா தொடர்பான அரசின் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அரசின் அறிவுரைகளை பின்பற்றினால் தான் நோய் பரவலை குறைக்க முடியும். தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்திலும் அரசு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது.

கொரோனா காலத்திலும் தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்ல முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றி. தொற்று அதிகமாக உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.