×

இந்தியாவிலேயே நீட் தேர்வை எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான் – முதல்வர் பழனிசாமி

நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. இருப்பினும், அரசுப்பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை அறிந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 7.5 இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் தற்போது 313 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். சசிகலா
 

நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. இருப்பினும், அரசுப்பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை அறிந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 7.5 இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் தற்போது 313 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். சசிகலா விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நான் கிராமத்தில் இருந்து வந்தவன், 7.5 % இட ஒதுக்கீட்டால் பெருமை கொள்கிறேன்.

நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் படிக்கக் கூடிய 41% பேர் அரசுப்பள்ளி மாணவர்கள். கடந்தாண்டு 6 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இந்தாண்டு 7.5% உள் ஒதுக்கீட்டால் 313 பேர் மருத்துவ படிப்பில் சேறும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆன்லைன் ரம்மி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், எதுவும் பேச முடியாது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, வருவாய்த்துறை அமைச்சர் அதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். எந்த சூழலிலும் மக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.