×

‘எடப்பாடி பழனிசாமி ஒரு ஜெராக்ஸ் முதல்வர்’ : எம்எல்ஏ செந்தில் பாலாஜி

முதல்வர் பழனிசாமி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி வருவதால் அவர் நிச்சயமாக விவசாயியாக இருக்க முடியாது என்று சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் கி்ருஷ்ணராயபுரம் தொகுதியில் ‘மக்களை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரை கூட்டத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய எம்எல்ஏ செந்தில் பாலாஜி, ” தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக-காங்கிரஸ் கூட்டணியின் போதுதான் நீட்தேர்வு கொண்டு வந்ததாக தவறான தகவல்களை கூறுகிறார் . அப்போது
 

முதல்வர் பழனிசாமி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி வருவதால் அவர் நிச்சயமாக விவசாயியாக இருக்க முடியாது என்று சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கி்ருஷ்ணராயபுரம் தொகுதியில் ‘மக்களை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரை கூட்டத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய எம்எல்ஏ செந்தில் பாலாஜி, ” தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக-காங்கிரஸ் கூட்டணியின் போதுதான் நீட்தேர்வு கொண்டு வந்ததாக தவறான தகவல்களை கூறுகிறார் . அப்போது கொண்டுவந்த சட்டத்தின்படி எந்தெந்த மாநிலங்கள் நீட்தேர்வை விரும்புகிறதோ அந்த மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்பதுதான். ஆனால் தமிழகத்திற்கு நீட் கொண்டு வரப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்.


எடப்பாடி முதல்வராக இருக்கும்போது நீட்தேர்வை ஏன் அனுமதிக்கிறார்? இந்த அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பது திமுக தலைவர் மு.க.;ஸ்டாலின் தான். எடப்பாடி பழனிசாமி ஒரு ஜெராக்ஸ் முதல்வர். முதல்வர் பழனிசாமி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி வருவதால் அவர் நிச்சயமாக விவசாயியாக இருக்க முடியாது ” என்று செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.