×

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ் ஆகியவற்றின் முதன்மை செயல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதே போல, பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களான சவுதி அரெம்கோ, எக்ஸன் மொபில், சி.பி.சி. கார்பரேசன் ஆகியவற்றின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு
 

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ் ஆகியவற்றின் முதன்மை செயல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதே போல, பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களான சவுதி அரெம்கோ, எக்ஸன் மொபில், சி.பி.சி. கார்பரேசன் ஆகியவற்றின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும், சலுகைகளை வழங்கிடும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அண்மையில், தமிழக அரசு சுமார் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிநாடு நிறுவனங்களுடன் செய்து கொண்டது.