×

தமிழகத்தில் இ பாஸ் ரத்து?

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு விரைவில் ரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது அதாவது கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், இபாஸ் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதனை நீக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், மக்களின் நலன்
 

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு விரைவில் ரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது அதாவது கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், இபாஸ் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதனை நீக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், மக்களின் நலன் கருதி அதனை தகர்க்க முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்து விட்டார். ஆனால், அத்தியாவசிய காரணங்களுக்கு கூட இபாஸ் கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், இபாஸ் முறையில் தளர்வுகள் அளிப்பதாக முதல்வர் அறிவித்தார். அதாவது, விண்ணப்பித்த எல்லாருக்குமே உடனடியாக பாஸ் கிடைக்கும் என்றும் ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்று இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார். அதன் படி தற்போது விண்ணப்பித்த எல்லாருக்கும் இபாஸ் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் சொந்த ஊர்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களுக்குள்ளும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து புதுச்சேரியில் இன்று முதல் இபாஸ் ரத்து செய்யப்பட்டது. அதே போல் தமிழகத்திலும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வாப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.