×

இ-பாஸ் ரத்து… சொந்த ஊருக்கு படையெடுக்க தயாராகும் மக்கள்!

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது அதாவது கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், இபாஸ் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதனை நீக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு தடை விதிக்காத தமிழக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்னர், இபாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்தது.
 

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது அதாவது கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், இபாஸ் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதனை நீக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு தடை விதிக்காத தமிழக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்னர், இபாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, விண்ணப்பித்த அனைவருக்குமே உடனடியாக இ பாஸ் கிடைக்கும் வழங்கப்பட்டுவந்தது. இதனால் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் சொந்த ஊர்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் ஒரு சிலர் பேருந்து சேவை, இ பாஸ் சேவையை காரணம் காட்டி, பணிக்கு வர சொன்ன நிறுவனங்களிடம் சாக்குப்போக்கு கூறி வந்தனர். தற்போது பேருந்து சேவை தொடக்கம், இ பாஸ் ரத்து என அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் இன்ப அதிர்ச்சியடைந்த தொழிலாளர்களும், மக்களும் சொந்த ஊருக்கும், பணியாற்றும் ஊருக்கும் புறப்பட தயாராகிவிட்டனர். ஆனால் வெளிநாடு, வெளி மாநிலங்களில் வருபவருக்கான இபாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.