×

கொரோனா கொடுமை: திருமணமான சில மணி நேரத்தில் கணவன் மனைவியைப் பிரித்த அதிகாரிகள்!

நெல்லையில் திருமணமான சில மணி நேரத்தில், மணமகனுக்கு கொரோனா கொரோனா உறுதியானது என்று அதிகாரிகள் வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது மகன் பெங்களூரு ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்காக மணமகன், மணமகள் குடும்பத்தினர் சொந்த ஊரான அம்பாசமுத்திரம் வந்துள்ளனர். வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை
 

நெல்லையில் திருமணமான சில மணி நேரத்தில், மணமகனுக்கு கொரோனா கொரோனா உறுதியானது என்று அதிகாரிகள் வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது மகன் பெங்களூரு ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்காக மணமகன், மணமகள் குடும்பத்தினர் சொந்த ஊரான அம்பாசமுத்திரம் வந்துள்ளனர்.

வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. மணமகன், மணமகள் குடும்பத்தினர் சந்தோஷமாக திருமண விழாவில் பங்கேற்றுக் கொண்டிருந்த போது, திருமணம் நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அதில் வந்தவர்கள் மணமகன், மணமகனின் அப்பா, அம்மா, அக்காவின் மகள் என நான்கு பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும் உடனடியாக அவர்களை பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் திருமணம் ஆன ஒரு சில மணி நேரத்தில் மனைவியை விட்டுவிட்டு கணவன் மட்டும் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார். மணமகள் வீட்டாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முடிவு இன்னும் வரவில்லை என்பதால் அவர்களை தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். திருமணம் முடிந்த ஒரு சில மணி நேரத்தில் கணவன், மனைவி பிரிக்கப்பட்டது இரு குடும்பத்தினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா பரவியிருக்குமோ என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது.