×

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் வரை காலக்கெடு

கொரோனா ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் எந்தவித அரசு மற்றும் தனியார் பணிகளும் நடைபெறாமல் முடங்கி உள்ளது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஊரடங்கால் முடங்கியுள்ள வாகன இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு போன்றவற்றவை காலவதியாவதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். இந்நிலையில் மோட்டார் வாகனங்களுக்கான ஆவணங்கள் செப்டம்பர் வரை பயன்படுத்தலாம்
 

கொரோனா ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் எந்தவித அரசு மற்றும் தனியார் பணிகளும் நடைபெறாமல் முடங்கி உள்ளது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஊரடங்கால் முடங்கியுள்ள வாகன இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு போன்றவற்றவை காலவதியாவதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

இந்நிலையில் மோட்டார் வாகனங்களுக்கான ஆவணங்கள் செப்டம்பர் வரை பயன்படுத்தலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எந்த வித அபராத கட்டணம் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.