×

தமிழகத்தை உலுக்கிய இரட்டைக் கொலை! ஆறுதல் சொல்லி தேற்றிய ரஜினிகாந்த்! ஈவு இரக்கமற்ற குன்றத்தூர் அபிராமிக்கு தீர்ப்பு…

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற கொடூர தாய் குன்றத்தூர் அபிராமி மீதான புகார்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அந்த இரட்டைக் கொலை தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வருபவர் விஜய்(30). இவரது மனைவி அபிராமி(25). இத்தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் இருந்தனர்
 

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற கொடூர தாய் குன்றத்தூர் அபிராமி மீதான புகார்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அந்த இரட்டைக் கொலை தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வருபவர் விஜய்(30). இவரது மனைவி அபிராமி(25). இத்தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் இருந்தனர் விஜய்க்கு ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும் பணி, ஆனால் அவர் நேரம் காலம் பாராமல் உழைத்து வந்திருக்கிறார். வீட்டிற்கு பெரும்பாலும் வராமல் கூட வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இதனால் அபிராமிக்கு அதிக சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு அவர் டிக் டாக் செயலி மூலம் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி அதை பதிவேற்றி வந்திருக்கிறார். அந்த சமயத்தில் குன்றத்தூர் பிரியாணி கடையில் அடிக்கடி பிரியாணி ஆர்டன் செய்து சாப்பிட்டு வந்திருக்கிறார். அப்போது பிரியாணி டெலிவரி செய்த சுந்தரம் என்பவர் அபிராமிக்கு கூடுதலாக பிரியாணி கொடுத்திருக்கிறார். இதில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ள உறவாக தொடர்ந்திருக்கிறது. இருவரும் அபிராமி வீட்டிலேயே அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இரு வீட்டாருக்கும் இது தெரிந்ததால் இருவரையும் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அபிராமி அதைக் கேட்கவில்லை. சுந்தரத்துடன் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார். கணவருக்கு இந்த விவரம் எல்லாம் தெரிந்தும் அவர் கண்டித்ததால் வெறுப்பில் இருந்திருக்கிறார் அபிராமி. இருவீட்டாரும் மீண்டும் உட்கார்ந்து பேசி கணவனும் குழந்தைகளும் தான் முக்கியம் டிக் டாக் செயலியில் ஆடிப் பாடுவது எல்லாம் விட்டுவிடு. கள்ளக்காதலனை விட்டு குடும்பத்தை கவனி என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள் . ஆனால் கணவனும் குழந்தைகளும் தேவையில்லை கள்ளக்காதலனும் அந்த உல்லாச வாழ்க்கையும்தான் அவசியம் என்று நினைத்த அபிராமி காதலனிடம் என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார். கணவனையும் குழந்தைகளையும் கொலை செய்து விட்டால் நாம் எந்த தடையும் இல்லாமல் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

இதை அடுத்து அவர் சொன்ன ஆலோசனையின்பேரில் கணவன் குழந்தைகளை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். இதில் கணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்ப குழந்தைகள் இருவரும் பலியாகிவிட்டனர் . பின்னர் காதலனுடன் கேரளாவிற்கு சென்று அங்கே புரோட்டா கடை நடத்தி கொண்டு அங்கேயே உல்லாச வாழ்க்கை வாழலாம் என்று நினைத்து சென்னை கோயம்பேட்டிலிருந்து தப்பித்து நாகர்கோயில் சென்றவர் நாகர்கோயில் பேருந்து நிலையத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பறிதவித்து நின்ற விஜய்யை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறி தேற்றினார். விஜய் ரஜினியின் தீவிர ரசிகர்.

அபிராமி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு பிரியாணி என்றால் உயிர். அதனால் அடிக்கடி ஓட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன். சுந்தரம் தான் வீட்டுக்கு பிரியாணி எடுத்து வருவார். என் மேல் இருந்த அன்பினால் அவர் ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டுவருவார். இதனால் எங்கள் நட்பு அதிகமானது. அது காமத்தில் முடிந்தது.

என் கணவர் இரவு பணி என்று அடிக்கடி வெளியே சென்று விடுவதால் நான் சுந்தரத்தை வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்தோம். ஒரு கட்டத்தில் கணவனையும் குழந்தைகளையும் கொலை செய்தால் தான் ஜாலியாக இருக்கலாம் என்று சுந்தரம் சொன்னால்தான் குழந்தைகளுக்கும் கணவருக்கும் பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து விட்டு மறுநாள் காலையில் மூன்று பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் மகள் மட்டும் படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளி இறந்துகிடந்தார். கணவன் வழக்கம் போல் எழுந்து வேலைக்கு சென்று விட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மகன் மட்டும் அரை மயக்கத்தில் கிடந்தான். உடனே மகனின் மூக்கையும் வாயையும் பொத்தி அவனை துடிதுடிக்க கொன்ற பின்னர் மகளின் சடலத்தையும் மகனின் சடலத்தையும் படுக்கையிலேயே அருகருகே போட்டேன். இரவு கணவர் வந்ததும் அவரையும் கொலை செய்வதற்காக காத்திருந்தேன் . ஆனால் அது பிரச்சனையாகிவிடும் நீ வந்துவிடு என்று சுந்தரம் சொன்னதால் மாலையில் புறப்பட்டு சுந்தரம் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இரவு முழுவதும் சுந்தரமும் நானும் ஒன்றாக இருந்தோம். மறுநாள் காலையில் என் தாலியை அடமானம் வைத்து கன்னியாகுமரிக்கு என்னை அனுப்பி வைத்தார் சுந்தரம் . ஆனால் நாகர்கோவிலில் நான் போலீசில் சிக்கிக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார் .

இந்த குன்றத்தூர் அபிராமியின் வழக்கு செங்கல்பட்டு மகிளாநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அபிராமியும் காதலன் மீனாட்சி சுந்தரமும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீஸார். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ஒரு சாட்சியின் மீது விசாரணையும் வழக்கின் மீதான வாதமும் நடைபெற இருப்பதால் இந்த வழக்கு நிறைவு பெறும் தருவாயில் இருக்கிறது. இது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கின் மீதான புகார்கள் அனைத்தும் உறுதியாகி விட்டதால் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.