×

‘ஊரடங்கில் கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ய கூடாது’ : ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

கொரோனா பேரிடர் காலத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் . இந்த சூழலை பயன்படுத்தி தனியார் வங்கிகள், நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த கோரி நிர்ப்பந்தித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே
 

கொரோனா பேரிடர் காலத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் . இந்த சூழலை பயன்படுத்தி தனியார் வங்கிகள், நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த கோரி நிர்ப்பந்தித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே மகளிர் சுய உதவி குழுவின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது . எனவே அவர்களது கடனுக்கான மாதத் தவணை தொகையை வசூலிக்க நிர்பந்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதற்கு கால அவகாசம் வழங்க வழங்க உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுய உதவிக் குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவிக் குழுவினரை கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் கடனை திரும்ப கட்டச்சொல்லி தொல்லை செய்ய கூடாது. மக்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் கடனை திரும்பக் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக ஊரடங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.