×

“அரசியல் நெருக்கடி, அதை கழகம் எதிர்கொண்ட விதம்” : சார்பட்டா பரம்பரைக்கு உதயநிதி பாராட்டு!

சார்பட்டா பரம்பரை படத்தை நடிகரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். 70 காலக்கட்டத்தில் சென்னையில் பிரபல விளையாட்டு போட்டியாக திகழ்ந்த குத்துச்சண்டை போட்டியை மையமாக எடுத்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ . இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில் படத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம்
 

சார்பட்டா பரம்பரை படத்தை நடிகரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார்.

70 காலக்கட்டத்தில் சென்னையில் பிரபல விளையாட்டு போட்டியாக திகழ்ந்த குத்துச்சண்டை போட்டியை மையமாக எடுத்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ . இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில் படத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக பசுபதி சார், டான்ஸிங் ரோஸ், வேம்புலி , ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக சார்பட்டா படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளதாகவும், இது திமுக பிரச்சார படமாகவும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.