×

தி.மு.க எம்.எல்.ஏ-வை காணவில்லை… அறிவாலயத்தில் புகார் கூற வந்த பெண்களால் பரபரப்பு!

சென்னை சோழிங்கநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கொரோனா காலத்தில் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அவரை காணவில்லை என்று கண்ணகி நகரைச் சேர்ந்த பெண்கள் அண்ணா அறிவாலயம் வந்து புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு, ஆலோசனை என்று அண்ணா அறிவாலயம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து புகார் மனு அளிக்க காத்திருந்தனர். இது குறித்து மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. நிர்வாகிகளை
 

சென்னை சோழிங்கநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கொரோனா காலத்தில் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அவரை காணவில்லை என்று கண்ணகி நகரைச் சேர்ந்த பெண்கள் அண்ணா அறிவாலயம் வந்து புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


தி.மு.க பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு, ஆலோசனை என்று அண்ணா அறிவாலயம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து புகார் மனு அளிக்க காத்திருந்தனர். இது குறித்து மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. நிர்வாகிகளை அனுப்பி என்ன ஏது என்று விசாரிக்கச் சொன்னார்.
அதன்படி அண்ணா அறிவாலய நிர்வாகிகள் அந்த பெண்களிடம் சென்று பேசிய போது, அவர்கள் சென்னை கண்ணகி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ (சோழிங்கநல்லூர் தொகுதி அரவிந்த் ரமேஷ்)

கொரோனா காலத்தில் தங்களுக்கு உதவிகள் எதையும் செய்யவில்லை என்றும், அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, எங்களை வந்து அவர் சந்திக்கவில்லை என்று புகார் கூறினர். இதனால், தி.மு.க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக கூறி அவர்களிடமிருந்து புகார் மனுவை வாங்கிய அவர்கள், கொரோனா காலத்தில் இப்படி எல்லாம் கூட்டமாக வரக்கூடாது என்று அவர்களை விரட்டியுள்ளனர்.


இது குறித்து அரவிந்த் ரமேஷிடம் கேட்ட போது, “கட்சியில் ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சியால் இப்படி புகார் வந்துள்ளது. கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் தொகுதி முழுவதும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.