×

“திமுகவை தடுக்கவும், மிரட்டவும் முடியாது” – மு.க. ஸ்டாலின் ட்வீட்!

முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மு.க. ஸ்டாலின் இன்று ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ரவி முன் விசாரணைக்கு ஆஜரானார். கடந்த ஜனவரி மாதம் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டாலின், தமிழக அரசை தரக்குறைவாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல ஜூன் மாதம்
 

முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மு.க. ஸ்டாலின் இன்று ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ரவி முன் விசாரணைக்கு ஆஜரானார். கடந்த ஜனவரி மாதம் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டாலின், தமிழக அரசை தரக்குறைவாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதே போல ஜூன் மாதம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து, அவதுாறு பரப்பும் வகையில் ட்வீட் செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் முதல்வர் குறித்து முரசொலி பத்திரிகையில் செய்தி வெளியானது குறித்தும் வழக்குபதியப்பட்டது. இதுகுறித்து நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையி 6 வழக்குகளின் விசாரணைகளுக்காக ஸ்டாலின் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளுக்காக ஆஜரானேன்.உயர்நீதிமன்றம் பல வழக்குகளை ரத்து செய்து
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் வழக்குகள்!திமுகவை தடுக்கவும் – மிரட்டவும் முடியாது. சட்டப்படி சந்திப்போம்!ஒவ்வொரு கிராமத்திலும் அதிமுகவை அம்பலப்படுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.