×

“மின்கட்டண விவகாரத்தில் திமுக குழப்பவும் இல்லை; அரசியலும் செய்யவில்லை” : எம்பி கனிமொழி

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், மின்சார பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஊரடங்கால் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பிரபலங்கள் உட்பட பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். மக்கள் வீட்டிலேயே இருப்பதால், கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாக தமிழ்நாடு
 

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், மின்சார பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஊரடங்கால் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பிரபலங்கள் உட்பட பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். மக்கள் வீட்டிலேயே இருப்பதால், கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கறுப்புக்கொடியுடன் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கைகளில் கறுப்புக்கொடியுடன் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மின்கட்டணம் விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாக அதிமுக குற்றச்சாட்டி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி, “மின்கட்டண விவகாரத்தில் திமுக குழப்பவும் இல்லை; அரசியலும் செய்யவில்லை.மின்கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு குடும்பத்துக்குமே தெரியும்” என்று கூறியுள்ளார்.