×

பாரத் நெட் திட்டத்தைத் தடுக்க நினைத்து மூக்கறுபட்ட தி.மு.க! – அமைச்சர் உதயகுமார் தாக்கு

பாரத் நெட் திட்டத்தைத் தடுக்க முயன்ற தி.மு.க மூக்கறுப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு எல்லாம் இணைய இணைப்ப வழங்க ஃபைபர் ஆப்டிக்கல் பதிக்கும் பாரத் நெட் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக தி.மு.க கூறி வந்தது. மிகப்பெரிய அளவில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க தரப்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஆனால் வழக்கு நடந்த எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறிய நிலையில் அந்த
 

பாரத் நெட் திட்டத்தைத் தடுக்க முயன்ற தி.மு.க மூக்கறுப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கிண்டலடித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு எல்லாம் இணைய இணைப்ப வழங்க ஃபைபர் ஆப்டிக்கல் பதிக்கும் பாரத் நெட் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக தி.மு.க கூறி வந்தது. மிகப்பெரிய அளவில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க தரப்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஆனால் வழக்கு நடந்த எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறிய நிலையில் அந்த வழக்கை ஆர்.எஸ்.பாரதி திரும்பப் பெற்றார்.


தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து ஆய்வு நடத்திய அமைச்சர் உதயகுமாரிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தமிழகத்தில் இணைப் புரட்சியை ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தைத் தடுக்க தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளதன் மூலம் தி.மு.க மூக்கறு பட்டு, உண்மை உலகிற்குத் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் ரூ.1390 கோடியில் முதல் கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. இது தவிர மருத்துவ கருவிகள் வாங்க ரூ.6000 கோடி தமிழக அரசு சார்பில் பிரதமரிடம் கேட்கப்பட்டுள்ளது. அந்த நிதி வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்” என்றார்.